ஜெயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மாணவர் கைது

ஜெயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-29 13:59 GMT

அரியலூர் மாவட்டம் தூத்தூர் அருகே உள்ள தேளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்/ இவரது மகன் ரஞ்சித் (20).இவர் பி.ஏ. தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி 14 வயது சிறுமியை காதலித்ததாக கூறப்படுகிறது. மேலும் ரஞ்சித் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தெரியவர இரு தரப்பு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதில் ரஞ்சித் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து சிறுமியின் குடும்பத்தாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி விசாரணை செய்து ரஞ்சித்தை பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து ரஞ்சித்தின் பெற்றோர்கள் முருகேசன் சுதா ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News