அரியலூர் மாவட்டம் கோடாலி அரசு பள்ளியில் மாணவியை தீண்டிய பாம்பு

கோடாலி கிராமத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவியை பாம்பு தீண்டியதால் மருத்துவமனையில் சிகிச்சை.;

Update: 2021-11-17 06:45 GMT

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி கனிமொழி.


அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகேயுள்ள கோடாலி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். அவரது மகள் கனிமொழி (11). இவர் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கனிமொழி காலையில் பள்ளிக்கு சென்று சில மாதங்களாக பூட்டியிருந்த பள்ளி அறையை திறந்தபோது கதவின் பின்புறத்தில் இருந்த பாம்பு எதிர்பாராத விதமாக கனிமொழியை கடித்ததாகவும் காலில் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மாணவி சத்தம் போடவே அருகில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஓடிவந்து பாம்பை அடித்து விரட்டினர்.

இதையடுத்து மாணவி கனிமொழியை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறும்போது கோடாலி அரசு உயர்நிலைப் பள்ளியை சுற்றி தூய்மைப் படுத்த வேண்டும். சுற்றிலும் தூய்மையான பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். பயன்பாடற்ற பள்ளி அறைகளை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News