ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் புதிய சித்த மருத்துவ கட்டிடம் திறப்பு
ஜெயங்கொண்டம் அருகே தா. பழூரில் புதிய சித்த மருத்துவ கட்டிடத்தை கண்ணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தனி கட்டிடம் இல்லாமல் இருந்து வந்தது. இதுகுறித்து பலமுறை புதிய கட்டிடம் அமைக்க வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டு இருந்தது.
இதனையொட்டி 2020 21 ஆம் ஆண்டிற்கான புதிய கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி ஆயூஸ் திட்டத்தின் கீழ் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சித்த மருத்துவத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
புதிய சித்த மருத்துவ கட்டிடத்தை ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. கண்ணன் இன்று திறந்து வைத்தார். இதில் வட்டார மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.