உடல் நலம் குன்றிய தேசியப்பறவை மயில் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

அரியலூர் மாவட்டத்தில் உடல் நலம் குன்றிய தேசியப்பறவை மயில் மீட்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு செய்யப்பட்டது.

Update: 2021-12-23 15:30 GMT

இரட்டைக்குளம் வயல்வெளி பகுதியில் உடல் நலம் குன்றிய தேசியப் பறவை மயிலை மீட்டு வியாழக்கிழமை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இரட்டைக்குளம் வயல்வெளி பகுதியில் உடல் நலம் குன்றிய தேசியப் பறவை மயிலை மீட்டு வியாழக்கிழமை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விக்கிரமங்கலம் இளைஞர்கள் சுதாகர் (28) சிலம்பரசன்(28) ஆகியோர் இரட்டைக் குளம் பகுதியில் உள்ள தங்களது வயல் வெளியை பார்ப்பதற்காகச் வியாழக்கிழமை சென்றனர். அப்போது அங்கு சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண் மயில் ஒன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு பறக்க முடியாமல் கீழே கிடந்தது.

இதனைக் கண்ட இரண்டு இளைஞர்களும் அதனை மீட்டு விக்கிரமங்கலம் காவல்துறையினரிடம் ஒப்படைக்க எடுத்துச்சென்றனர். பின்பு அவர்கள் அரியலூரில் இருந்து வனத்துறை அதிகாரி கிருஷ்ணர் வரவழைக்கப்பட்டு அவரிடம் அந்த மயில் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. பின்பு அதனை மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு உடல் நலம் சரியான பிறகு காட்டில் விடுவதாக கூறி எடுத்துச் சென்றார்.

Tags:    

Similar News