25 ஆயிரம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

1260 ஹான்ஸ் பாக்கெட்டுகள், 480 பான்மசாலா உள்ளிட்ட 25 ஆயிரம் மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2021-08-28 05:29 GMT
25 ஆயிரம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள். 


  • whatsapp icon

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு  கிடைத்த தகவலையடுத்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேவங்க முதலியார் தெருவில் குமரன் என்பவரது கடையில் போலீசார் சோதனை செய்தனர். இதில் 1260 ஹான்ஸ் பாக்கெட்டுகள், 480 பான்மசாலா உள்ளிட்ட 25 ஆயிரம் மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடையின் உரிமையாளர் குமரனை கைது செய்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News