பள்ளிகள் திறப்பு: புதிய மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கி ஆசிரியர்கள் வரவேற்பு
கோடை விடுமுறைக்குப் பின் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்கள்.
அரியலூர்- கோடை விடுமுறைக்குப் பின் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு. ஆர்வமுடன் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்.
கோடை விடுமுறை மே 14 முதல் ஜூன் 12 தேதி வரை தமிழக அரசு அறிவித்திருந்தது. கோடை விடுமுறை முடிந்து ஒன்று வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் ஆர்வமுடன் கல்வி கற்க மாணவ மாணவிகள் பள்ளிக்கு வந்திருந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் தங்களது நண்பர்கள் மற்றும் பள்ளியைக் காண மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வந்திருந்தனர். புதிதாக பள்ளிக்கு சேர வரும் மாணவர்களை மரக்கன்று வழங்கி பள்ளிக்கு வரவேற்ற சின்னவளையம் அரசு உயர் நிலைப்பள்ளி.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கு வருகை தந்த மாணவ, மாணவிகளையும் புதிதாக ஆறாம் வகுப்பு முதல் 10 ம் வகுப்புவரை சேர வந்த மாணவ மாணவிகளுக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கொளஞ்சியப்பா, உடையார்பாளையம்.பள்ளி துணை ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மரக்கன்றுகளை வழங்கி மாணவர்களை இன்முகத்துடன் வரவேற்றனர்.