டீக்கடை பெஞ்சில் கேட்பாரற்று கிடந்த 5 சிறிய அளவிலான சாமி சிலைகள்

கல்லாத்தூர் தண்டலை டீக்கடை பெஞ்சில் கேட்பாரற்று கிடந்த 5சிறிய அளவிலான சாமி சிலைகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2021-11-25 07:34 GMT

சிறிய அளவில் செம்பு உலோகத்திலான 5 சாமி சிலைகள்

அரியலூர் மாவட்டம் கல்லாத்தூர் தண்டலை பகுதியில் வேல்முருகன்(38) என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது டீக்கடை பெஞ்சில் கேட்பாரற்று பச்சைநிறத்தில் கேரி பேக் ஒன்று இருந்துள்ளது. அதனை எடுத்து பார்த்தபோது உள்ளே  சிறிய அளவில் செம்பு உலோகத்திலான 5 சாமி சிலைகள் 1 தூவகாலும் இருப்பதைக் கண்ட வேல்முருகன் அதனை ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதில் கருடபகவான் அம்மன், பெருமாள், நடராஜர், ஆஞ்சநேயர்,உள்ளிட்ட 5 சிறிய அளவிலான சாமி சிலைகள், தூவகால் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தகவலறிந்த திருச்சி சிலை தடுப்பு தனிப் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சிலைகளை ஆய்வுசெய்து கருவூலத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தினார்.அதன்படி சிலைகள் அனைத்தும் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் இந்த சிலை குறித்து திருச்சி சிலை தடுப்பு தனிப் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கூறுகையில் நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத சிலைகளாகவும் இதன் உரிமையாளர் யார்? என்று தெரியாமல் இருப்பதாலும் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளோம் மேலும் இது குறித்து உரிய விசாரணை செய்து சிலைகளை தன்னுடையது என வந்து கேட்பவரிடம் உரிய ஆவணங்களை பெற்று அவரிடம் ஒப்படைக்க இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் ஏதேனும் கோயில்களில் திருடப்பட்டதா? அல்லது வீடுகளில் பூஜைக்காக வைத்திருந்து அதனை திருடிக் கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றுள்ளனரா? என போலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News