ஜெயங்கொண்டத்தில் ரூ.2,000 பணமும் 14 வகை மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டது
ரூ.2,000 மற்றும் 14வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவற்றை,சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் தொடங்கி வைத்து வழங்கினார்.
ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றியம்,இளையபெருமாள்நல்லூர் நியாயவிலை கடையில், தமிழக முதல்வர் அறிவிப்பின்படி,கொரோனா நிவாரண நிதியாக இரண்டாம் கட்டமாக ரூ.2,000 வழங்குதல் மற்றும் 14 வகையான மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவற்றை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் பொதுமக்களுக்கு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் இரா.மணிமாறன்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும்,ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்.கே.பி.சங்கரன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ராஜ குலோத்துங்கன்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி.எம். ஷாஜஹான்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வீர.சிவா,கிளை கழக செயலாளர் சின்னசாமி,விற்பணையாளர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.