ஜெயங்கொண்டம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

ஜெயங்கொண்டம் அருகே கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2022-06-30 15:10 GMT

கொள்ளையடிக்கப்பட்ட உண்டியல்.

அரியலூர் மாவட்டம், சூரியமணல் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீமகா சக்தி மாரியம்மன் கோயில். இக்கோயிலின் கேட்டை நேற்று இரவு மர்ம நபர்கள் பாறையால் நெம்பி உள்ளே புகுந்த கோவிலில் இருந்த நான்கரை அடி உயரமுள்ள உண்டியலை அருகே உள்ள செட்டிகுழிபள்ளம் இளமங்கலம் ராமகிருஷ்ணன் என்பவரது முந்திரி வயலில் வைத்து உடைத்தனர்.

அதிலிருந்த காணிக்கை பணம் முழுவதையும் கொள்ளையடித்துவிட்டு முந்திரி வயலிலேயே உண்டியலை வீசி சென்றுள்ளனர். மேலும் அங்கே அமர்ந்து மது குடித்துள்ளனர்.

சம்பவம் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கோவிலில் இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் செட்டிகுழிப்பள்ளம் அருகே இளமங்கலம் முந்திரி வயலில் கொள்ளையர்கள் உடைக்கப்பட்ட உண்டியலை வீசிசென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News