பிராய்லர்கோழி வளர்ப்பிற்கு கிலோவுக்கு 12 ரூபாய்‌ வழங்க கோரிக்கை

பிராய்லர்கோழி வளர்ப்பிற்கு கிலோவுக்கு 12 ரூபாய்‌ வழங்க தமிழ்நாடு கறிகோழிபண்ணை விவசாயிகள் ஒருங்கிணைப்பு நலசங்கம் கோரிக்கை

Update: 2022-05-07 08:56 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அதிகப்படியாக தனியார் நிறுவனங்கள் மூலம் கறி கோழி குஞ்சுகளை விவசாயிகளிடம் வளர்ப்பு செய்ய வழங்கி வருகின்றனர். ஒரு கோழி குஞ்சி வளர்வதற்கு 40 நாட்கள் ஆகின்றன. இதற்கு பராமரிப்பு செலவுகள் மின்சாரம், உணவு, இடம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் உள்ளன. மேலும் இவற்றை பராமரிப்பு செய்ய கூடுதலாக வேலை ஆட்களும் உள்ளனர். இவை அனைத்திற்கும் விலை உயர்வு ஏற்பட்ட நிலையில் கோழிகளை வளர்ப்பதில் நஷ்டம் ஏற்படுவதாக கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறுகின்றனர். அதனை வளர்ப்பதற்கு 1கிலோ கறி கோழிக்கு 6.50 பைசா வழங்கி வருகின்றனர்.

தற்போது உள்ள விலைவாசி உயர்வு காரணமாக நஷ்டம் ஏற்ப்படுவதால் 1கிலோ கோழிக்கு 12 ரூபாய்‌ வழங்க வேண்டும் என அரியலூர், கடலூர் மாவட்ட தமிழ்நாடு கறி கோழி பண்ணை விவசாயிகள் ஒருங்கிணைப்பு நல சங்கம் சார்பில் தனியார் நிறுவனங்களிடம் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
Tags:    

Similar News