ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள் சாலைமறியல்
ஜெயங்கொண்டம் அருகே, இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி, பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணிலா. இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உடையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் என்பவரை திருமணம் செய்து வைத்தனர்.
வரதட்சணை கொடுமையால் கண்ணிலா கடந்த நாற்பது நாட்களுக்கு முன்பு வீட்டில் தீயிட்டு கொளுத்தி கொண்டார். தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கண்ணிலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இறந்த கண்ணிலாவின் இறப்புக்கு உரிய விசாரணை மற்றும் கணவர் அரவிந்த் மற்றும் மாமியார் அம்பிகா,மாமனார் அர்ச்சுனன் ஆகியோரை கைது செய்யக்கோரி, அமரர் ஊர்தி வாகனத்தை மறித்து ஜெயங்கொண்டம் கும்பகோணம் நெடுஞ்சாலையில் அணைக்குடம் கிராமத்தில், உறவினர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.