ஜெயங்கொண்டம் : மறியல் நடத்திய தொழிற்சங்கத்தினர் 150 பேர் கைது

பெட்ரோல், டீசல் விலை உயர்வு உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜெயங்கொண்டத்தில் மறியலில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-28 06:45 GMT

ஜெயங்கொண்டம் - பெட்ரோல் டீசல் விலை உயர்வு உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, மறியல் போராட்டம் நடத்திய 154 பேர் கைது.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிறுவனங்களை தனியார்மயமாக்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,  தொழிலாளர் சட்டங்கள் என்ற பெயரில் தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றியதை ரத்து செய்ய வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,  இன்று நாடு முழுவதும் பல்வேறு சங்கங்களின் சார்பில்,  பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசை கண்டித்து பெரும்பாலான தொழிற் சங்கங்கள் இன்றும் நாளையும் பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன் ஒரு பகுதியாக ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நான்கு ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொ.மு.ச சிஐடியு, ஏ.ஏ.எல்.எஃப் எச்.எம்.பி.எஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் என பெண்கள் உட்பட 154 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News