ஜெயங்கொண்டத்தில் விபச்சாரம் நடத்திய பெண், உதவியாளர் கைது

ஜெயங்கொண்டம் அண்ணா நகரில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-07-09 12:11 GMT

கைது செய்யப்பட்ட இருவர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் நீண்ட நாட்களாக விபச்சாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசியம் தகவல் கிடைத்தது. இது குறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஒரு வீட்டிற்கு அதிக நபர்கள் வந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் தனிப்படை அமைத்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

ஜெயங்கொண்டம் அண்ணா நகரில் வசிக்கும் சந்திரா என்பவர் வீட்டில் சில பெண்கள் மற்றும் ஆண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை அழைத்து வந்து விசாரித்ததில் விபச்சாரம் செய்வது உறுதியானது.

இதனையடுத்து சந்திரா மற்றும் அதற்கு உதவியாக இருந்த ரகு பிரசாத் ஆகிய இருவரையும் ஜெயங்கொண்டம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News