அரியலூர் மாவட்ட 2,42,495 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் யார் சென்றாலும் பொங்கல் பரிசுத்தொகுப்பு நியாய விலைக்கடையில் வழங்கப்படும்

Update: 2022-01-05 08:00 GMT

அரியலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை ​அமைச்சர் சிவசங்கர் தொடக்கி வைத்தார

அரியலூர் மாவட்டத்தில் 2,42,495 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சர் சிவசங்கர் தொடக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி, நியாய விலைக்கடையில் பொது விநியோகத்திட்ட அங்காடிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை,  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கி தொடக்கி  வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட தமிழகத்தில் பொதுவிநியோகத்திட்டத்தில் 2.15 கோடி அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ வெல்லம், 50 கிராம் முந்திரி, 50 கிராம் திராட்சை, 10 கிராம் ஏலக்காய், 500 கிராம் பாசிப்பருப்பு, 100 கிராம் நெய், 100 கிராம் மஞ்சள் தூள், 100 கிராம் மிளகாய்த் தூள், 100 கிராம் மல்லித் தூள், 100 கிராம் கடுகு, 100 கிராம் சீரகம், 50 கிராம் மிளகு, 200 கிராம் புளி, 250 கிராம் கடலைப் பருப்பு, 500 கிராம் உளுத்தம் பருப்பு, 1 கிலோ ரவை, 1 கிலோ கோதுமை மாவு, 500 கிராம் உப்பு, கரும்பு (ஒரு முழுக் கரும்பு), ஒரு துணிப் பை ஆகிய 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிட உத்தரவிட்டார்.

அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் 448 பொதுவிநியோத் திட்ட அங்காடிகளில் இணைக்கப்பட்டுள்ள 2,42,495 குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கி பொங்கல் பரிசுத்தொகுப்புகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்புடைய நியாய விலைக்கடைகள் மூலமாக இன்று (04.01.202) முதல் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் சுழற்சி முறையில் நாள் ஒன்றுக்கு முற்பகலில் 100 குடும்ப அட்டைகளும், பிற்பகலில் 100 குடும்ப அட்டைகளும் வழங்;கும் நாள், நேரம் போன்ற விவரங்களைக் குறிப்பிட்டு வீடுகள்தோறும் நேரில் சென்று நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. முற்பகலில் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் பிற்பகலில் வரும் பட்சத்தில் அவர்களுக்கும் பொருட்கள் வழங்கவும், மின்னணு குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் யார் சென்றாலும் பொங்கல் பரிசுத்தொகுப்பு நியாய விலைக்கடையில் வழங்கப்படும். எனவே, பொங்கல் தொகுப்பினை பெற்று பொங்கல் திருநாளை சிறப்பாக அனைவரும் கொண்டாட வேண்டுமென  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் க.பாண்டியன், கோட்டாட்சியர் அமர்நாத், துணைப்பதிவாளர்கள் ஜெயராமன், அறவளி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சார்பதிவாளர்கள் அ.பழனியப்பன், இளஞ்செழியன், மற்றும் அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News