போதை பழக்கத்தை தவிர்க்க காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்

குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள்மீது காவல்துறையினருக்கு இலவச தொலைபேசி எண் 10581 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்;

Update: 2021-09-15 06:52 GMT

த.பொட்டக்கொல்லை கிராமத்தில், மது மற்றும் பிற போதை பழக்கத்தை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்த  அரியலூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் 


அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கே. பெரோஸ் கான் அப்துல்லா  வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்டம் , உடையார்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கரும்புள்ளி கிராமமான  த.பொட்டக்கொல்லை கிராமத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சுவது, சட்ட விரோதமாக மதுபாட்டில்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பது, கள் இறக்குவது ஆகிய செயல்களில் ஈடுபடுவது குற்றம் எனவும் பொதுமக்களுக்கு, மது மற்றும் பிற போதை பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்பது பற்றியும் அரியலூர் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் மற்றும் போலீசார்  ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிராசாரம் செய்தனர்.   இக்குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது  இலவச தொலைபேசி எண் 10581 தொடர்பு கொண்டு  காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் வலியுறுத்தினர். 

Tags:    

Similar News