ஜெயங்கொண்டம் : நிலம் ஒப்படைப்பதற்கான அரசாணை கிடைக்க பாமக தான் காரணம்
Pmk is the reason why the government is available to hand over the land;
ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக செய்தி தொடர்பாளர் மற்றும் சமூக நீதிப் பேரவை தலைவருமான பாலு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்திற்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்களுக்கு இடம் ஒப்படைப்பதற்கான அரசாணை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது.
இந்த நிலையில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து, பாமக செய்தி தொடர்பாளர் மற்றும் சமூக நீதிப் பேரவை தலைவருமான பாலு தலைமையிலான பாமகவினர், கீழ குடியிருப்பு, கல்லாத்தூர், கூவத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து இனிப்புகள் வழங்கி குறைகளை கேட்டறிந்தார்.
அதேபோன்று தற்போது நிலக்கரி மின் திட்டத்திற்கு இடம் ஒப்படைப்பதற்கான அரசாணை வழங்கி இருந்தாலும், அதன் நில உரிமையாளர்களுக்கு பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்போதுதான் பல்வேறு அரசின் நலத்திட்டங்களை அவர்கள் பெற முடியும். அதேபோன்று இந்த திட்டத்தில் விடுபட்ட மேலும் 2 கிராம மக்களுக்கு இடம் ஒப்படைப்பதற்கான அரசாணை வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே விடுபட்ட இரு கிராம மக்களுக்கும் ஏற்கெனவே வழங்கியது போன்று அரசாணை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.