நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை வெளியிடக்கூடாது: திரையரங்க நிர்வாகியிடம் பாமக மனு
நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என திரையரங்க உரிமையாளரிடம் பாமக சார்பில் மனு அளிக்கப்பட்டது;
நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என தியேட்டர் உரிமையாளரிடம் பாமகவினர் மனு அளித்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரத்தில் தனியாருக்கு சொந்தமான திரையரங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜெய்பீம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா வன்னிய மக்களை இழிவாக சித்தரித்ததாகவும்,பேசியதாகவும் சர்ச்சை இன்னும் ஓயவில்லை. அந்த விவகாரம் தொடர்பாக இதுவரை நடிகர் சூர்யா எந்தவித அறிக்கையோ வருத்தமும் தெரிவிக்காத காரணத்தால், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்களிடம் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை வெளியிடக்கூடாது எனக் கூறி மனு அளித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஜெயங்கொண்டம் தனியார் திரையரங்கு உரிமையாளரிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என வலியுறுத்தி மனு அளித்தனர்.