விரைவில் மாட்டுவண்டி மணல் அள்ள அனுமதி; ஜெயங்கொண்டத்தில் அடையாள அட்டை வழங்கல்

விரைவில் மாட்டுவண்டி மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெயங்கொண்டம் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-08 12:24 GMT

ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் 500க்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவாமங்கலம் கிராமத்தில் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் பேசுகையில், இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் உள்ளதாகவும், அவரது குடும்பங்கள் அனைவரும் அவர்கள் மாட்டு வண்டி தொழிலையே நம்பி உள்ள நிலையில், சென்ற ஆட்சியில் இவர்களது நலனில் அக்கறை காட்டப்படாமல் இருந்து வந்தது.

தற்பொழுது கடந்த இரண்டு மூன்று மாதங்களாக மாட்டுவண்டி தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர், மாட்டுவண்டி மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்க கோரி மனு அளித்திருந்தனர். இதனை எடுத்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் மற்றும் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ஆகிய நானும் சேர்ந்து இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டோம். இப்பகுதியிலுள்ள மாட்டுவண்டி தொழிலாளர்கள் நலன் கருதி, விரைவில் மாட்டுவண்டி மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

மேலும் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் 500க்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.

Tags:    

Similar News