ஜெயங்கொண்டத்தில் விதிமுறைகளை மீறிய 3 கடைகளுக்கு அபராதம்

விதிமுறைகளை மீறி இயங்கிய 2 நகைக்கடைகள், ஒரு வளையல் கடைகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-05-15 12:31 GMT

விதியை மீறி திறந்திருந்த நகைக்கடைக்கு ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷிணி அபராதம் விதித்தார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் ஊரடங்கின் ஒரு பகுதியாக இன்று முதல் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே காய்கறி, மளிகை, உள்ளிட்ட கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜெயங்கொண்டம் நகரில் கடைவீதி, 4ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக அரசின் உத்தரவை மீறி காலை 10 மணிக்கு பிறகும் நகைக்கடைகள், வளையல் கடைகள் இயங்கி வந்தன.

இதனையடுத்து அரசின் உத்தரவை பின்பற்றாதகடைகள் குறித்து ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷிணி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஜெயங்கொண்டம் கடை வீதி பகுதியில் அரசு கால நிர்ணயம் அறிவித்த 10 மணிக்கு பிறகும் இயங்கி வந்த இரண்டு நகைக்கடைகள், ஒரு வளையல் கடைகள் என மூன்று கடைகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

வைரஸ் தொற்று அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அரசின் உத்தரவை கடைபிடிக்காமல் இதுபோன்று கடைகள் செயல்பட்டு வருவதை கண்காணித்து தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி எச்சரிக்கை விடுத்தார்.


Tags:    

Similar News