ஜெயங்கொண்டம்: இடஒதுக்கீடு ரத்தை கண்டித்து பாமக, வன்னியர் சங்கத்தினர் சாலை மறியல்

ஜெயங்கொண்டத்தில் இட ஒதுக்கீடு ரத்து செய்ததை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் வன்னியர் சங்கத்தினர் சாலை மறியல்.

Update: 2021-11-01 14:48 GMT

பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் திருமாவளவன் தலைமையில்  ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.


ஜெயங்கொண்டத்தில் இட ஒதுக்கீடு ரத்து செய்ததை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் வன்னியர் சங்கத்தினர் சாலை மறியல்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்போராடிப் பெற்ற 10.5 சதவீத வன்னியர் இட ஒதுக்கீட்டை மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்ததை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி தலைமையில் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக திரண்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர், இட ஒதுக்கீடு ரத்து செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், பின்னர் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 150 பேர் மீது ஜெயங்கொண்டம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News