ஜெயங்கொண்டத்தில் 4-ம் ஆண்டு ஊட்டச்சத்து உணவு வழங்கும் விழா
ஜெயங்கொண்டத்தில், 4-ம் ஆண்டு ஊட்டச்சத்து உணவு வழங்கும் விழாவில், எம்எல்ஏ கண்ணன் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கினார்.;
உலக காசநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவனையில், பெரம்பலூர் -அரியலூர் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. - க.சொ.கணேசன் நினைவு அறக்கட்டளை இணைந்து 4-ஆம்ஆண்டு ஊட்டச்சத்து உணவு வழங்கும் விழாவை நடத்தின.
இதில் சிறப்பு விருந்தினராக க்லந்துகொண்டு, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளை வழங்கினார். இந்நிகழ்வில் துணை இயக்குனர் (காசநோய்) மருத்துவர் நெடுஞ்செழியன், தலைமை மருத்துவர் உஷா செந்தில்குமார், மருத்துவர்கள் மற்றும் காசநோய் ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.