ஜெயங்கொண்டம் அருகே புதிய மின்மாற்றிகளை எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்

ஜெயங்கொண்டம் அருகே புதிய மின்மாற்றிகளை கண்ணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.;

Update: 2021-10-14 07:49 GMT

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், தண்டலை ஊராட்சியில் மின்மாற்றிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கண்ணன் எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்.


ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், தண்டலை ஊராட்சியில், வடவீக்கம் கிராமம் பள்ளிக்கூட தெரு மற்றும் வடக்கு தெருவல், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் மூலமாக அமைக்கப்பட்டுள்ள,  புதிய மின்மாற்றிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் இயக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மின்வாரிய செயற்பொறியாளர் த.செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் பூ.சாமிதுரை, உதவி பொறியாளர் ஜெ.சந்திரசேகர், தண்டலை ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி ராஜீவ்காந்தி, தண்டலை கிளை தி.மு.க. செயலாளர் த.சேகர், வடவீக்கம் கிளை செயலாளர் பிரான்சீஸ், கல்லாத்தூர் அண்ணாநகர் கிளை செயலாளர் ரவி, கல்லாத்தூர் முன்னாள் ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News