ஆன்லைன் வாயிலாக நெட்பால் விளையாட்டு வினாடி-வினா போட்டி

தமிழ்நாடு நெட்பால் விளையாட்டுக் கழகம் சார்பில் மாநில அளவிலான நெட்பால் வினாடி-வினா போட்டி இணையதளம் வழியில் நடைபெற்றது.

Update: 2021-07-16 08:47 GMT

தமிழ்நாடு நெட்பால் விளையாட்டுக் கழகம் மற்றும் பரப்ரம்மம் பவுண்டேசன் இணைந்து நடத்திய  மாநில அளவிலான நெட்பால் விளையாட்டு வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள். 

தமிழ்நாடு நெட்பால் விளையாட்டுக் கழகம் மற்றும் பரப்ரம்மம் பவுண்டேசன் இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு மாநில அளவிலான நெட்பால் விளையாட்டு வினாடி-வினா போட்டி இணையதளம் வழியில் நடைபெற்றது. இதில் 25 மாவட்டத்தைச் சேர்ந்த 317 வீரர்கள் பங்கு கொண்டனர். அதில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நெட்பால் அசோசியேஷன் மாநில பொதுச்செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யபாரதி முதல் பரிசாக 3000 ரூபாய், அரியலூர் மாவட்டம் கலைச்செல்வன் இரண்டாம் பரிசாக 2000 ரூபாய் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி மற்றும் மது வர்ஷினி ஆகிய இருவரும் மூன்றாமிடம் பெற்று தலா 500 ரூபாய் பெற்றுக் கொண்டனர். சான்றிதழ் மற்றும் பரிசு தொகையை பரப்ரம்மம் பவுண்டேஷன் நிறுவனர் முத்துக்குமரன் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கார்த்திக்ராஜன், அமுதி, செல்வராஜேஷ், சிந்துஜா ஆகியோர் செய்திருந்தனர்.


Tags:    

Similar News