தா.பழூர் அருகே தாயை கொலை செய்து ஓடையில் வீசிய மகன் கைது

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே தாயை கொலை செய்து ஓடையில் வீசிய மகனை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-12-27 10:56 GMT

கைது செய்யப்பட்ட செல்வம்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அமிர்தராயங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் காமாட்சி 85 வயது மதிக்கத்தக்கவர். இவருக்கு 3 மகள் மற்றும் 2 மகன் உள்ளனர். இதில் 3 மகள்களுக்கும் திருமணம் ஆன நிலையில் ஒரு மகன் இறந்து விட்டார். இதில் கடைசி மகனான செல்வம் என்பவர் அடிக்கடி சொத்து பிரச்சினை காரணமாக தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனியாக வாழ்ந்து வந்தவர் கடந்த 15 நாட்களுக்கு முன் வீட்டை விட்டு போனவர் வீடு திரும்பி வரவில்லை. இதனால் காணாமல் போன காமாட்சியை உறவினர்கள் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். வீட்டில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரம் உள்ள தனது கொல்லை அருகே உள்ளஅணைக்குடம் கிராமத்தில் இருந்து வரும் பாட்டாகோவில் ஓடையில் காமாட்சி உடல் கிடந்தது கடந்த 18 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து தா.பழூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அவரது கடைசி மகன் செல்வம் என்பவர் கொலை செய்ததாக காவல்துறையினர் அவரை கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News