ஜெயங்கொண்டத்தில் சாலை பலப்படுத்தும் பணியை எம்.எல்.ஏ. துவக்கி வைப்பு
MLA News - அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நடைபெறும் சிமெண்ட் சாலை பணியினை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.துவக்கி வைத்தார்.;
MLA News - ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி, ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றியம், காட்டாகரம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி முகமை TNRRIS திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில், வீரபோகம் முதல் காட்டாகரம் (0/0 - 1/150 ) செல்லும் சாலை பலப்படுத்தும் பணியை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் துவக்கி வைத்து, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 5.40 லட்சத்தில் நடைபெறும் சிமெண்ட் சாலை பணியினையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) சிவாஜி, ஒன்றிய பொறியாளர் குமார், மாவட்ட கழக பொருளாளர் சி.ஆர்.எம்.பொய்யாமொழி, கிளை செயலாளர் வி.ஆர்.காமராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, ஒப்பந்தகாரர் துரைமாறன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2