அம்பேத்கர் சிலைக்கு எம்.எல்.ஏ. கண்ணன் மாலை அணிவித்து மரியாதை

ஜெயங்கொண்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Update: 2022-04-14 09:46 GMT

ஜெயங்கொண்டத்தில் கண்ணன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

ஜெயங்கொண்டம் நகரில் அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 132-வது பிறந்த நாள் - சமத்துவ நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் நகர செயலாளரும், நகர்மன்ற துணை தலைவருமான வெ.கொ.கருணாநிதி,மாவட்ட துணை செயலாளர் மு.கணேசன்,வி.சி.க நிர்வாகிகள் ஜெயங்கொண்டம் தொகுதி செயலாளர் க.இலக்கியதாசன்,சிவக்குமார் மற்றும் தி.மு.க நகர்மன்ற உறுப்பினர்கள், நகர, வார்டு கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 132-வது பிறந்த நாளை முன்னிட்டு, குழுமூர் நீட் போராளி அனிதா நினைவிடத்தில்,அனிதா அறக்கட்டளை சார்பாக, அண்ணல் டாக்டர் அம்பேத்கர் படத்திற்கு மலரஞ்சலியும், அனிதா சிலைக்கு மாலை அணிவித்து,மாணவர்களுக்கு படிப்பிற்கான உபகரணங்களும்,கல்வி உதவித் தொகையும், வழங்கும் நிகழ்வில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், செந்துறை ஒன்றிய செயலாளர் மு. ஞானமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் அனிதாவின் சகோதரர் மணிரத்தினம்,மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் விஸ்வநாதன்,ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் எழில்மாறன்,ஒன்றிய குழு உறுப்பினர் ரெங்கராதன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News