அரசு பள்ளிகளுக்கு பெஞ்ச், டெஸ்க் வழங்கினார் எம்.எல்.ஏ.கண்ணன்

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி அரசு பள்ளிகளுக்கு பெஞ்ச், டெஸ்க் ஆகியவற்றைசட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வழங்கினார்.

Update: 2022-06-29 08:37 GMT

ஜெயங்கொண்டம் அரசு பள்ளிகளுக்கு கண்ணன் எம்.எல்.ஏ. பெஞ்ச், டெஸ்க் ஆகியவற்றை வழங்கினார்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட, அழகாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, விளந்தை அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, ஆண்டிமடம் அரசு மேல்நிலைப் பள்ளி, திருக்களப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ/ 14,10,000 மதிப்பீட்டிலான பெஞ்ச் மற்றும் டெஸ்க் ஆகியவற்றை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா (வ.ஊ), கழக இலக்கிய அணி புரவலர் ராமதாஸ், ஊராட்சிமன்ற தலைவர்கள் அழகாபுரம் கலியபெருமாள், விளந்தை வழக்கறிஞர் நடராஜன், ஆண்டிமடம் ஜெயராமன், திருக்களப்பூர் புஷ்பம் செல்வமணி, தலைமை ஆசிரியர்கள் அழகாபுரம் வீரபாண்டியன், விளந்தை தமிழ்முருகன், ஆண்டிமடம் பரிமளம், திருக்களப்பூர் ஆரோக்கியமேரி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பத்மநாதன், வாசுகி சபாநாயகம், முனைவர்.ஜோதி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சதீஷ், ஒன்றிய நிர்வாகிகள் குணசேகரன், விஜய், தண்டபாணி, தொ.மு.ச. நிர்வாகிகள் கொளஞ்சி, இளங்கோவன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, வரதராஜன்பேட்டை பேரூராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, வரதராஜன்பேட்டை வடக்கு தெருவில் ரூபாய் 10,00,000 மதிப்பிலான தார்சாலை அமைத்தல், தென்னூர் கிராமத்தில் ரூ. 10,93,000 மதிப்பிலான புதிய அங்கன்வாடி மையம் கட்டுதல் ஆகிய பணிகளை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் நல விடுதியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா (வ.ஊ), வரதராஜன்பேட்டை பேரூராட்சி தலைவர் மார்க்கிரேட் அல்போன்ஸ், துணைத்தலைவர் எட்வின் ஆர்தர், பேரூர் செயலாளர் அல்போன்ஸ், பேரூராட்சிமன்ற செயல் அலுவலர் மருதுபாண்டியன், கழக இலக்கிய அணி புரவலர் ராமதாஸ், ஒன்றிய குழு உறுப்பினர் பத்மநாதன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சதீஷ், ஒன்றிய நிர்வாகிகள் குணசேகரன், விஜய், தண்டபாணி, தொமுச நிர்வாகிகள் கொளஞ்சி, இளங்கோவன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News