நடமாடும் ரேஷன் கடை : எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைப்பு
நடமாடும் நியாய விலைக் கடையினை, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் துவங்கி வைத்து, பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.;
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தா.பழூர் ஒன்றியம், தென்கச்சிப்பெருமாள் நத்தம் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட மேலக்குடிக்காடு, ஜெயங்கொண்டம் ஒன்றியம், தழுதாழைமேடு கூட்டுறவு கடன்சங்கத்திற்கு உட்பட்ட வாணதிரையன்குப்பம், ஆண்டிமடம் ஒன்றியம், கூவத்தூர் கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட அருளானந்தபுரம் ஆகிய ஊர்களில், நடமாடும் நியாயவிலைக் கடையினை, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவங்கி வைத்து, பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் த.அறப்பளி, ஒன்றிய கழக செயலாளர்கள் ஜெயங்கொண்டம் வடக்கு இரா.மணிமாறன், ஆண்டிமடம் தெற்கு க.தர்மதுரை, கூட்டுறவு தா.பழூர் சரக சார் பதிவாளர் சசிகுமார், ஜெயங்கொண்டம் சரக கூட்டுறவு சார் பதிவாளர் விவேக், ஆண்டிமடம் வட்ட வழங்கல் அலுவலர் ராஜகோபால், ஊராட்சி மன்ற தலைவர்கள் தென்கச்சிபெருமாள்நத்தம் ஆனந்தவள்ளி, கூவத்தூர் டேவிட், ஒன்றிய குழு உறுப்பினர் தனசேகர், கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்கள் தா.பழூர் குமார், தழுதாழைமேடு தங்க.சுப்பிரமணியன், கூவத்தூர் கலையரசன் உள்ளிட்ட கூட்டுறவு சங்க அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.