ஜெயங்கொண்டம் அருகே வல்லம் கிராமத்தில் பள்ளியை ஆய்வு செய்தார் எம்.எல்.ஏ.

ஜெயங்கொண்டம் அருகே வல்லம் கிராமத்தில் சாலை மற்றும் பள்ளியை எம்.எல்.ஏ. கண்ணன் ஆய்வு செய்தார்.

Update: 2021-11-07 11:24 GMT
ஜெயங்கொண்டம் அருகே வல்லம் கிராமத்தில் பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்தார் கண்ணன் எம்.எல்.ஏ.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரிடையாக சென்று பொதுமக்களை சந்தித்து அக்கிராமத்தில் பிரச்சனைகளை கேட்டறிந்து வருகிறார்.

அதன் ஒருபகுதியாக வல்லம் கிராமத்திற்கு சென்ற எம்.எல்.ஏ. கண்ணன் அக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் ஏற்பட்டுள்ள பழுதை சீர்செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் தங்கள் கிராமத்தில் உள்ள மண்சாலைகளை தார்சாலையாக மாற்றித்தருமாறு கேட்டுக்கொண்டனர்.

விரைவில் அதிகாரிகளிடம் கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. கண்ணன் பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

ஆண்டிமடம் ஒன்றியம்,மேலூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம், பாலசிங் ஆகியோரின் குழந்தைகள் ஹரிணி, லோகேஷ் ஏரியில் மூழ்கி இறந்ததை முன்னிட்டு அவர்களின் இல்லம் சென்று ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் ஆறுதல் கூறினார்.

Tags:    

Similar News