ஆடி திருவாதிரை விழா: கங்கைகொண்டசோழபுரம் பெரியகோயிலில் எம்எல்ஏ கண்ணன் ஆய்வு
ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான முன்னிட்டு ஆடி திருவாதிரை விழா முன்னேற்பாடுகள் குறித்து எம்எல்ஏ கண்ணன் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் யுனெஸ்கோவால் உலக பிரதான பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழா கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு அரசு கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை ஆண்டுதோறும் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மூலமாக அரசு விழாவாக நடத்த அரசாணையிட்டுள்ளது.
அதன்படி, , மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு ஆடி திருவாதிரை விழா -2022 கொண்டாடப்படுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கங்கைகொண்டசோழபுரம் பெரிய கோயிலில், அரசு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கினார்.