கல்லூரி மாணவர் பேச்சுப்போட்டி: அமைச்சர் சிவங்கர் துவங்கி வைத்தார்

அரியலூர் மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியினை, அமைச்சர் சிவங்கர் துவங்கி வைத்தார்.;

Update: 2022-04-23 10:30 GMT

தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அரியலூர் மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியினை,  அமைச்சர் சா.சி.சிவங்கர் துவங்கி வைத்தார்.


அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு அரசு மாநில சிறுபான்மையினர் ஆணையம் மற்றும் அரியலூர் மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியினை, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவங்கர் துவங்கி வைத்தார்.

இதில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன், தி ரைசிங் சன் ஆசிரியர் முனைவர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எம்.ஆர்.சி. கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். ஆர்.ரகுநாதன் , முனைவர் டி.கே. சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News