புக்குழி புதிய மின் பாதையை அமைச்சர் சிவசங்கர் இயக்கி வைத்தார்

அய்யூர் கிராமத்தில் ரூ.64.5 இலட்சம் மதிப்பீட்டில் புக்குழி புதிய மின் பாதையை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இயக்கி வைத்தார்

Update: 2022-09-24 09:12 GMT

அய்யூர் கிராமத்தில் உள்ள 33/11 கேவி துணை மின் நிலையத்தில் புதிய 11 கேவி புக்குழி மின் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இயக்கி வைத்தார்


அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், அய்யூர் கிராமத்தில் உள்ள 33/11 கே.வி துணை மின் நிலையத்தில் புதிய 11 கே.வி புக்குழி மின் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இயக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் பொதுமக்களுக்கு சீரான மின் விநியோகம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மின் தேவை அதிகம் உள்ள பகுதிகளுக்கு பொதுமக்களின் கோரிக்கையின்படி புதிய மின் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, தேவையான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் 23.09.2022 அன்று ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அய்யூர் கிராமத்தில் உள்ள 33/11 கேவி துணை மின் நிலையத்தில் மத்திய மாநில அரசின் தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா நிதியுதவி திட்டத்தின்கீழ் ரூ.64.5 இலட்சம் மதிப்பீட்டில் புதிய 11 கே.வி புக்குழி மின் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இயக்கி வைத்தார்.

இந்த புதிய 11 கே.வி புக்குழி மின் பாதையின் மூலம் காங்குழி, சிலம்பூர், புக்குழி, திருக்கோணம் ஆகிய கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பெறுவதுடன், இக்கிராமங்களில் உள்ள 185 விவசாய மின் இணைப்புகள், 2500 இதர மின் இணைப்புகள் என மொத்தம் 2685 மின் இணைப்புகள் பயன்பெறும். இத்திட்டத்தால் குறைவான மின் அழுத்தம் மேம்படுத்தப்படுவதுடன், மின் சாதனங்கள் பழுதடைவது தடுக்கப்படும். ஏற்கனவே உள்ள மின் மாற்றிகளுக்கு புதிய மின் வழித்தடம் மூலம் மின்சாரம் அளிக்கப்படுவதுடன், மின் துறைக்கான மின்சார இழப்பு குறைகிறது. பொதுமக்களுக்கு சீரான மற்றும் தடையில்லா மின்சாரம் கிடைக்க பெறும். எனவே, இப்பகுதி பொதுமக்கள் மின்சாரத்தினை தேவைக்கேற்ப பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மேற்பார்வைப் பொறியாளர் அம்பிகா, மின்சார வாரிய அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News