முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியன் உருவப் படத்திற்கு அமைச்சர் சிவசங்கர் மரியாதை

Minister Sivasankar pays homage to the portrait of former MP Sivasubramanian

Update: 2022-06-14 16:21 GMT

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.சிவசுப்பிரமணியனின் உருவப் படத்திற்கு, மாவட்ட திமுக செயலாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம், தேவனூரில் உள்ள எஸ்.எஸ் படிப்பக வளாகத்தில் , முன்னாள் பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.சிவசுப்பிரமணியனின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது  உருவப் படத்திற்கு, மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, கழக சட்டதிருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர்,கிளை கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.



Tags:    

Similar News