ஜெயங்கொண்டம் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு

ஜெயங்கொண்டம் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.

Update: 2022-05-27 12:49 GMT

அமைச்சர் சிவசங்கர் ஒரு மாணவருக்கு பட்டம் வழங்கினார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்,மகிமைபுரம், மாடர்ன் கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில்  கலந்துகொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் பேசும்போது, அரசியல் என்பது நமது வாழ்வில் நம்மையறியாமலேயே கலந்துவிட்டது. நாம் விரும்புகிறோமோ விரும்பவில்லையோ தேர்தல் வருகிறது. அந்த தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் பதவிக்கு வருகிறார்கள். இதுதான் அரசியல். நாம் முறையாக நல்லவர்களுக்கு வாக்களித்து அவர்களை வெற்றி பெறச் செய்யாவிட்டால் நல்லவர்கள் பதவிக்கு வருவதை நாமே இழந்துவிடுகிற சூழ்நிலை ஏற்படுகிறது.

தமிழக அரசின் தற்போது தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தி மாணவர்களின் கல்வி திறனை அதிகரிக்கச் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உயர்கல்வி பிற மாநிலங்களை விட நாம் 50 சதவீதத்தை தாண்டி விட்டோம். ஒட்டுமொத்த இந்தியாவிலும் உயர்கல்வி 27 சதவீதத்தைத் தாண்டி உள்ள நிலையில் நாம் 50 சதவீதத்தை கடந்து விட்டோம்.

வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தான் பிரதமராக மத்திய அமைச்சர்களாக வரக் கூடிய சூழ்நிலையில், மத்திய அரசு திட்டங்கள் அனைத்தும் அவர்களின் மாநிலங்களுக்கே முன்னுரிமை வழங்கி வழங்கப்படுகின்றன. ஆனால் உயர்கல்வியில் அவர்கள் வரமுடியாத சூழலில் தமிழகம் மட்டும்  முன்னேறி வருகிறது.

தற்போதைய தி.மு.க. ஆட்சி உயர்கல்விக்கு போர்க்காலமாக மாற வேண்டும் என்பது முதலமைச்சரின் குறிக்கோளாக உள்ளது. எனவே பட்டம் பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் மென்மேலும் தங்களது கல்வியை வளர்த்துக்கொள்ளவேண்டும் என பேசினார்.

Tags:    

Similar News