கீழணையில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து வைத்த அமைச்சர் பன்னீர்செல்வம்

கீழணையில் விவசாய பாசனத்திற்காக தண்ணீரை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.;

Update: 2022-09-19 13:14 GMT

விவசாயத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரை மலர் தூவி வரவேற்ற அமைச்சர் பன்னீர் செல்வம்.

அணைக்கரை கீழணையில், தஞ்சை, மயிலாடுதுறை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு, வடக்கு, தெற்கு ராஜன் வாய்க்கால்கள் மற்றும் வீராணம் ஏரி ஆகியவற்றிற்கு, விவசாய பாசனத்திற்காக தண்ணீரை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.


இந்நிகழ்வில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம், தமிழக அரசின் தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயங்கொண்டம் கண்ணன், காட்டுமன்னார் கோவில் சிந்தனைசெல்வன், சீர்காழி பன்னீர்செல்வம் மற்றும் அரசு அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News