ஜெயங்கொண்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு

உத்திரக்குடி கிராமத்தில்,ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் கலந்துகொண்டு பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.

Update: 2021-10-15 10:58 GMT

உத்திரக்குடி கிராமத்தில் நடைபெற்ற “மக்களை தேடி மருத்துவம்” திட்ட நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் கலந்துகொண்டு பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.


தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான "மக்களை தேடி மருத்துவம்" திட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், அங்கராயநல்லூர் ஊராட்சி, உத்திரக்குடி கிராமத்தில் சித்த மருத்துவர் செந்தில்நாதன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் சாமிதுரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.

இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் ப.கலைக்கதிரவன், மின்சார வாரிய செயற்பொறியாளர் த.செல்வராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் தன.அருள்தாஸ் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

Tags:    

Similar News