ஜெயங்கொண்டம் அருகே அத்தையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ஜெயங்கொண்டம் அருகே அத்தையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கோரியம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி ஷகிலா (43). இவர் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த அவரது நாத்தனார் மகன் பாபா என்கின்ற பிரபாகரன் (27), அத்தை உறவான ஷகிலாவுடன் தகராறு செய்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஷகிலா ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் பிரபாகரன் மீது புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து பாபா என்கின்ற பிரபாகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.