ஜெயங்கொண்டம் அருகே ஆர்.எஸ்.பதி தோப்பில் ஆண் சடலம் மீட்பு
ஜெயங்கொண்டம் அருகே ஆர்.எஸ். பதி தோப்பில் கிடந்த ஆண் சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்துகின்றனர்.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மகிமைபுரம் CSI பள்ளி எதிரில் உள்ள ஆர்.எஸ்.பதி. தோப்பில் தேவனாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த சாமிதுரை என்பவர் இறந்து கிடந்துள்ளார். இதனை அவ்வழியே ஆடு மாடுகள் மேய்க்க சென்ற மூதாட்டி ஒருவர் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்து அருகில் உள்ளவரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அருகிலிருந்தவர்கள் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து போலீசார் இறந்தவரின் சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
அவர் இறந்து கிடந்த இடத்தில் ஒரு பையும் அதில் ஒரு விஷ பாட்டில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? அவர் எதற்காக இங்கு வந்தார்? என யாரேனும் கொலை செய்து வந்து போட்டு இருப்பார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.