ஜெயங்கொண்டம் அருகே மலங்கண்குடியிருப்பு ஏரியில் ஆண் உடல் சடலமாக மீட்பு

Ariyalur News Today -ஜெயங்கொண்டம் போலீசார் சக்கரவர்த்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை.;

Update: 2022-06-09 01:00 GMT

சடலத்தை மீட்ட போலீசார்.

Ariyalur News Today - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மலங்கன்குடியிருப்பு கிராமத்தில் உள்ள ஆலடி ஏரியில் ஆண் சடலம் ஒன்று கிடைப்பதாக பார்த்த பிராஞ்சேரி விஏஒ கவிதா ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை செய்தனர். விசாரணையில் இறந்தவர் மலங்கன்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த அவரது மகள் வினிதா தந்தையின் உடலைப் பார்த்து கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஏரியில் கால் கழுவுவதற்காக இறங்கியதாக கூறப்படுகிறது. இதில் கால் இடரி ஏரியில் விழுந்த அவர் மீண்டும் எழ முடியாமல் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து கேள்விப்பட்ட மலங்கன்குடியிருப்பு பகுதி மக்கள் ஏராளமானோர் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீசார் சக்கரவர்த்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். சக்கரவர்த்திக்கு வள்ளி என்ற மனைவியும், வினோத் என்ற மகனும், வினிதா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர். மனைவி வள்ளி கோயம்புத்தூரில் தன் மகன் மருமகளுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News