ஜெயங்கொண்டம் அருகே சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டிக்கொலை
ஜெயங்கொண்டம் அருகே 6 பேர் கொண்ட கும்பலால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.;
திருவாரூர் மாவட்டம் நாச்சியார் கோயிலை சேர்ந்தவர் சாமிநாதன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியற்றி வந்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அணைக்குடம் கிராமத்தில் ஒரு திருமணத்திற்காக வந்த இவரை முன்விரோதம் காரணமாக 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தனர். இதுபற்றி தா.பழூர் போலீசார் மற்றும் ஜெயங்கொண்டம் டி. எஸ். பி. கலைக்கதிரவன் விசாரணை நடத்தி வருகின்றனர்.