அரியலூர் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறந்ததை கண்டித்து பாமக வினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் மது கடைகள் திறந்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2021-06-17 08:41 GMT

அரியலூரில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமையில் அவரது இல்லத்தின் முன்பு  நடந்த ஆர்ப்பாட்டம்.

கொரனா காலத்தில் மதுக்கடைகள் திறந்ததை கண்டித்தும், மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியினர், அவரது இல்லத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.

அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில்  பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமையில் அவரது இல்லத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில சமூக நீதிப் பேரவை மாநில தலைவர் வழக்கறிஞர் பாலு தலைமையில் மீன்சுருட்டி அருகே வாழைக்குட்டை இல்லத்தில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூரில் மாநிலத் துணைத் தலைவர் சின்னதுரை இல்லத்தின் முன்பு பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைப் போன்றே மாவட்டத்தில் செந்துறை, திருமானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியினர் அவர்களின் இல்லத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags:    

Similar News