ஜெயங்கொண்டத்தில் வரும் முன் காப்போம் திட்ட முகாம் துவக்கம்

கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு முகாமை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார்;

Update: 2022-03-11 12:07 GMT

ஜெயங்கொண்டத்தில் வரும் முன் காப்போம் திட்ட முகாமை கண்ணன் எம்.எல்.ஏ.  தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாமை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், தா.பழூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் என பத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் முகாமில் கலந்துகொண்டு ஸ்கேன் பரிசோதனை, முதியோர், குழந்தைகளுக்கு காது ,மூக்கு தொண்டை, ரத்த அழுத்த பரிசோதனை, கண் சம்பந்தமான பரிசோதனைகள் செய்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

மேலும் அங்கன்வாடி பணியாளர்கள் காய்கறிகள், பழங்கள், இயற்கை கீரைகள் வகைகள், சிறுதானியங்கள் என அனைத்தையும் காட்சி படுத்தினர். சித்தமருத்துவம் சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இம்முகாமில் காடுவெட்டாங்குறிச்சி, சுற்றுவட்டார பகுதிகளான கோட்டியால்,சிங்கராயபுரம், நல்லனம், நாயகனைபிரியாள், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் முதியவர்கள், குழந்தைகள் என பலரும் பரிசோதனை செய்து முகாமில் பயன்பெற்றனர்.

Tags:    

Similar News