அரியலூர்: தா. பழூரில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கி வைப்பு

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் கொரோனா விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் துவக்கி வைத்தார்.;

Update: 2022-01-08 08:42 GMT

தா.பழூர் ஒன்றியத்தில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டி பிரச்சாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ் துவக்கி வைத்தார்.


உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அவற்றை பொதுமக்கள் கடைபிடித்து பொது இடங்களுக்கு சென்று வர வேண்டும். முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை வழங்கி வருகின்றனர்.

இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரண்டு ஆட்டோ வாகனங்கள் மூலம் கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வாகனங்கள் துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், செந்தில், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News