1000 ஆண்டு பழமை வாய்ந்த சிவன்கோவில் கும்பாபிஷேக விழா: கணபதி ஹோமத்துடன் தொடக்கம்
ஜமீன் சுத்தமல்லி சிவன்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற கணபதி ஹோமத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு
உடையார்பாளையம் அருகே 1000 ஆண்டு பழமை வாய்ந்த சிவன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெறும் கணபதி ஹோமத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள ஜமீன் சுத்தமல்லி கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுகந்த குந்தளாம்பிகை அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்கள் இருந்து வருகின்றன இந்த கோயிலில் குடமுழுக்கு எப்போது நடைபெற்றது என்பது குறித்து எந்தவித வரலாற்றுச் சுவடுகளும் இல்லை நிலையில் கடந்த 2011ம் ஆண்டு குடமுழுக்கு செய்வதாக ஊர் பொதுமக்கள் தீர்மானித்த நிலையில் கோயில் வேலைகளில் ஈடுபட்டனர் கடந்த பதினோரு ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் தற்போது கோவில் திருப்பணிகள் முற்றிலும் முடிவுற்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
ஆலயத்தில் வரும் 9 ஆம் தேதி வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், கணபதி ஹோமம் துவங்கியது. இரண்டு நாட்கள் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ள நிலையில் இன்று துவங்கிய கணபதி ஹோமத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட நீதிபதிகள் மற்றும் ஊர் நாட்டாமை, முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், சிவனடியார்கள் என பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.