கொள்ளிடம் கரையில் பழுதடைந்த மதகினை சீரமைக்கும் பணி தொடக்கம்

கொள்ளிடம் கரையில் பழுதடைந்த மதகினை ரூ.15 லட்சத்தில் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

Update: 2021-09-28 12:40 GMT
கொள்ளிடம் கரையில் பழுதடைந்த மதகினை சீரமைக்கும் பணி தொடங்கியது.

அரியலூர் மாவட்டம் தா.பழுர் ஒன்றியம்,தென்கச்சி பெருமாள்நத்தம்- மேலக்குடிகாடு கிராமத்தையொட்டியுள்ள கொள்ளிடம் ஆற்றின் இடது கரை மைல் 62/2-ல் உள்ள பாசன மதகு பழுடைந்துள்ளது. இதனை சீர்செய்து தருமாறு விவசாயிகள் தமிழகஅரசிற்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனையடுத்து கொள்ளிடம் கரைப்பகுதியில் உள்ள பழுதடைந்த மதகினை 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்க பொதுப்பணித்துறைக்கு தமிழகஅரசு  நிதிஒதிக்கீடு செய்துள்ளது.

இச்சீரமைக்கும் பணியை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் உதவி பொறியாளர் மோகன்ராஜ், பணிமேற்பார்வையாளர் சரவணன், ஒப்பந்தக்காரர் பாலமுருகன், மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் என்.ஆர். இராமதுரை, ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் த.நாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தவள்ளி ஆறுமுகம் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News