தண்ணீரால் சூழப்பட்டன கொள்ளிடம் ஆற்று படுகை செங்கல் சூளைகள்

அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்று படுகையில் உள்ள 100க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் தண்ணீரால் சூழப்பட்டன.

Update: 2022-07-19 08:10 GMT

கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் உள்ள செங்கல் சூளைகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.

அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்று படுகையில் உள்ள தென்கச்சி பெருமாள் நத்தம், மேலகுடி காடு, அன்னகாரன் பேட்டை, கோடாலி கருப்பூர், அடிக்காமலை உள்ளிட்ட சுமார் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் செங்கல் சூளைகள் போடப்பட்டுள்ளன. மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட மழைநீர் ஆனது வெள்ளப்பெருக்கெடுத்துகொள்ளிடம் ஆற்றில் அதிகப்படியான நீர் வரத்தால் ஆற்றின் கரை ஓரத்தில் உள்ள பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஆற்றில் இறங்கவோ ஆடு மாடுகள் மேய்க்கவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் கரை ஓரம் உள்ள பகுதிகளில் போடப்பட்ட 100 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளை அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் போட்டுள்ளனர். இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கலாம் என்றும் அனைத்து செங்கல்கள் சூளைகளும் வெள்ளத்தில் சிக்கியது.

Tags:    

Similar News