அரியலூர்: கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய 50 மாடுகள் உயிருடன் மீட்பு

அரியலூர் மாவட்த்தில் கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய 50 மாடுகளை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.;

Update: 2021-11-24 04:15 GMT

கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய மாடுகளை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுகா தா.பழூர் அருகே உள்ள கோடாலிக்கருப்பூர் கொள்ளிடம் ஆற்றின் நடுவில் உள்ள மணல் திட்டு பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற 60 மாடுகள்  சிக்கிக்கொண்டன.ஆற்றில் 1 லட்சம் கன அடி தண்ணீர் செல்வதால் மாடுகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.மேலும் தண்ணீர் வரத்து அதிகரித்தால் மாடுகள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது.

தீயணைப்பு துறையினர் மாடுளை மீட்க மிதவை படகு மூலம் ஆற்றின் நடுத்திட்டு பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்ட போது இரவு நேரமானதால் மீட்பு பணியை தொடர முடியவில்லை.

இந்நிலையில் இரண்டாம் நாளாக மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர் மணல் திட்டில் சிக்கித் தவித்த 60 மாடுகளையும் உயிருடன் மீட்டனர்.மாடுகளை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்

Tags:    

Similar News