கீழணையில் இருந்து கொள்ளிடம்ஆற்றில் வினாடிக்கு 1,174 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
மழையால் நீர்வரத்து அதிகரித்து, கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 1,174 கன அடி தண்ணீர் வெளியேற்றம்;
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டிைய அடுத்துள்ள அணைக்கரை கீழணையின் மூலம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.
இந்நிலையில், தற்போதைய தொடர் மழையின் காரணமாக, நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 1,174 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம், 9 அடி ஆகும். தற்போதைய நீர் மட்டம் 8.5 அடியாக உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.