கீழணையிலிருந்து வினாடிக்கு 7821கனஅடி மழைநீர் கடலுக்கு வெளியேற்றம்

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பால் கீழணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 7821கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Update: 2021-11-08 05:50 GMT

கீழணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அணைக்கரையில் உள்ளது கீழணை. இது அரியலூர், தஞ்சை, கடலூர் ஆகிய மாவட்டங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது. இந்த கீழ் அணையின் மூலம் மயிலாடுதுறை மாவட்டம் கடலூர் மாவட்டத்தில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது.

இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் கீழணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு சுமார் 7821 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

கீழ் அணையின் மொத்த நீர்மட்டம் 9.00 அடி ஆகும் தற்போது நீர் மட்டம் 8.5 அடியாக உள்ளது. இந்நிலையில் அதிகமாக உள்ள நீரை வெளியேற்றும் பொருட்டு கடலுக்கு அனுப்பப்படுகிறது.

Tags:    

Similar News