170 விவசாயிகளுக்கு வேளாண்மை பொருட்களை எம்.எல்.ஏ. கண்ணன் வினியோகம்
வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பில் பண்ணை உபகரண பொருட்களை 170 விவசாயிகளுக்கு ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் வழங்கினர்;
கண்ணன் எம்.எல்.ஏ. வேளாண் கருவிகளை வழங்கினார்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டார வேளாண்மை அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பண்ணை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க. கண்ணன் விவசாயிகளுக்கு இடு பொருட்களை வழங்கினார். கதிர் அரிவாள், மண்வெட்டி, பாறை, களைவெட்டி மற்றும் இடு பொருள்கள் அடங்கிய 6 தொகுப்பு பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டது.
இதில் தா.பழூர் வட்டாரத்தில் 170 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குனர் அசோகன், தா.பழூர் அட்மா திட்ட வட்டார தலைவர் சவுந்தர்ராஜன், வேளாண்மை உதவி அலுவலர் சிவக்குமார் மற்றும் செல்வபிரியா, அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் விஜயகுமார், ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் பண்ணை கருவிகள் வழங்கப்பட்டது.